நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மின்னணு கழிவுகளை குறைக்க அவற்றை பழுதுபார்ப்பு குறியீட்டிற்கான இலச்சினை வடிவமைப்பு போட்டிகள் தொடக்கம்
प्रविष्टि तिथि:
04 NOV 2025 12:37PM by PIB Chennai
மின்னணு சாதனங்களில் ஏற்படும் பழுதை நீக்கும் பணிகளுக்கு பழுதுநீக்க குறியீடுகள் மூலம் நுகர்வோருக்கு அதிகாரமளிப்பதை மையமாகக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில் இலச்சினை வடிவமைப்பு போட்டிகளை மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மைகவ் இணைந்து தொடங்கியுள்ளது. இதற்கு தில்லி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் உள்ள நுகர்வோர் சட்டத்துறை தலைமையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த முயற்சி நாடு முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்து புதுமையான யோசனைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்பதையும் ஊக்குவிக்கிறது.
முன்னதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் பழுதுநீக்க உரிமைகள் தொடர்பாக பழுதுபார்ப்பு குறியீடு கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மின்னணு சாதனங்களின் கழிவுகளை குறைப்பதில் நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் மின்னணு சாதனங்களை தெரிவு செய்து தங்களது சோதனைகளை வழங்க வகைசெய்கிறது. புதிய மின்னணு பொருட்களை வாங்குவதற்கு பதிலாக குறைந்த செலவில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்னணு சாதனங்களை பழுது பார்ப்பதற்கான வாய்ப்புகளை நுகர்வோருக்கு வழங்குவதில் இது குறிப்பிடத்தக்க பயன்பாட்டை கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2186152
***
AD/SV/AG
(रिलीज़ आईडी: 2186385)
आगंतुक पटल : 25