பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
17 OCT 2025 10:13PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2025) உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், 140 கோடி மக்களின் வலுவான ஆதரவுடன் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா முன்னேற்றப் பாதையில் விரைவாக சென்றுகொண்டிருக்கும் நாடாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சிப்புகள் (சேமிகன்டக்டர்) முதல் கப்பல் கட்டுமானம் வரை அனைத்துத் துறைகளிலும் இந்தியா தற்போது நம்பிக்கையுடன் தற்சார்பு நாடாக உருவெடுத்து வருகிறது என்று கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். தற்போது இந்தியாவை நம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்ட நாடாக உலக நாடுகள் கருதுவதாக பிரதமர் தெரிவித்தார்.
உலக அளவில் நிலையற்ற பொருளாதார சூழல் நிலவும் நிலையில் இந்தியாவிற்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு இடர்பாடுகளையும் சீர்திருத்தங்களாக மாற்றி ஒவ்வொரு சீர்திருத்த நடவடிக்கையும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய புரட்சிகரமான நடவடிக்கையாக மாற்றம் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்குவதற்கான கோபுரங்களைத் தயாரிப்பதில் உலக அளவில் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்திருப்பது பெருமை அளிக்கக் கூடியதாக உள்ளது என்று அவர் கூறினார்.
மாவோயிஸ்ட் தீவிரவாதம் பெரும் அநீதி என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள இளைஞர்களை தேசத்திற்கு எதிராக தூண்டி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இதிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் உறுதியானவை என்ற அவர் கூறினார்.
பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை மாற்றத்திற்கான மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது என்று தெரிவித்த பிரதமர், பெட்ரோல் விநியோக நிலையங்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி 24 மணி நேரமும் இயங்கி வருவதாக தெரிவித்தார். மாற்று எரிபொருள் மற்றும் மின்சார உற்பத்தியில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் முதலீடுகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் காரணமாக கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த மாநாட்டில் இலங்கைப் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா, ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் திரு டோனி அபாட், பிரிட்டன் முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180607
****
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2184996)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam