பிரதமர் அலுவலகம்
சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 1-ம் தேதி பிரதமர் பயணம் சத்தீஷ்கர் மாநிலம் உருவான 25-வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
Posted On:
31 OCT 2025 12:02PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (01.11.2025) சத்தீஷ்கர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
நவா ராய்ப்பூர் அடல் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில் காலை 10 மணிக்கு மனதோடு பேசுங்கள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் வாழ்க்கையின் பரிசு நிகழ்ச்சியில் பிறவி இதயநோய் சிகிச்சை பெற்றுக் கொண்ட 2,500 குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இதனையடுத்து காலை 10.45 மணிக்கு பிரம்மகுமாரிகளின் மனஅமைதிக்கான நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைக்கிறார். இது தியானம் மற்றும் மன அமைதிக்கு ஆன்மீக கற்றலுக்கான நவீன மையமாகும்.
இதனையடுத்து காலை 11.45 மணிக்கு சத்தீஷ்கர் மாநில புதிய சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா அடல் பிகாரி வாஜ்பேயின் திருவுருவச் சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார். பின்னர் சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவையின் புதிய கட்டடத்தையும் அவர் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இந்தப் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் பசுமைக் கட்டடமாக முழுவதும் சூரிய மின்சக்தி மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.30 மணிக்கு ஷாஹித் வீர் நாராயணன் நினைவு மற்றும் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியகத்தை அவர் திறந்து வைக்கிறார். இந்த அருங்காட்சியகம் அம்மாநில பழங்குடியின சமுதாயத்தின் நாட்டுப்பற்று, தியாகம் மற்றும் துணிச்சலை எடுத்துக் காட்டும் வகையிலும் அது சார்ந்த மரபுகளைப் பாதுகாக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த அருங்காட்சியகத்துக்கான இணையதளம் மற்றும் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் “பழங்குடியினரின் துணிச்சல்” என்ற மின்னணு புத்தகத்தையும் வெளியிடுகிறார்.
பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு சத்தீஷ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவைக் குறைக்கும் வகையில் நடைபெறும் சத்தீஷ்கர் மாநில வெள்ளிவிழா நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில் அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184489
***
SS/SV/KPG/SH
(Release ID: 2184793)
Visitor Counter : 14
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam