PIB Headquarters
azadi ka amrit mahotsav

தேசிய ஒற்றுமை தினம் : தேசிய ஒற்றுமையின் ஒரு தூண்

Posted On: 30 OCT 2025 11:59AM by PIB Chennai

தேசிய ஒற்றுமை தினம் என்றும் அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ், ஆண்டுதோறும் அக்டோபர் 31 அன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூரும் விதமாகவும், இந்தியாவில் தேசிய மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் அவர் வகித்த முக்கிய பங்கை கௌரவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் இறையாண்மை, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் விளக்குகிறது.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சர்தார் படேலின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கௌரவித்து கொண்டாடுவதற்காக மத்திய அரசு  அறிவித்தபடிஇந்த நாள் முதன்முதலில் 2014-ல் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2015 அக்டோபர் 31 அன்று , நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே நீடித்த மற்றும் கட்டமைக்கப்பட்ட தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு இடையே மேம்பட்ட புரிதல் மற்றும் பிணைப்பை ஏற்படுத்துவதற்காகவும், 'ஒரே பாரதம் உன்னத பாரதம் ' என்ற முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். சர்தார் படேலின் 150வது பிறந்தநாளை குறிக்கும் விதமாக இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தினம்  கொண்டாடப்படுவது  மிகவும் சிறப்பு வாய்ந்தது.

1947-ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒருங்கிணைப்பு செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகித்தார். இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40% ஐ உள்ளடக்கிய 560-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. சர்தார் படேல் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், வற்புறுத்தல், தேவையான இடங்களில் உறுதியான நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்.  இந்த மாநிலங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து, நவீன இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்தார். அவரது முயற்சிகள், ஒன்றுபட்ட ஜனநாயகக் குடியரசிற்கு அடித்தளம் அமைத்தன. நாடு இன்று ஒன்றுபட்டு நிற்பதற்கு இந்த இரும்பு மனிதரின் உறுதிப்பாடுதான் காணமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184055

 

***

SS/PKV/KR


(Release ID: 2184205) Visitor Counter : 10