இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு விருது 2025: ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2025 5:14PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் 2025-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகள், அர்ஜுனா விருது, அர்ஜுனா விருது (வாழ்நாள்), துரோணாச்சாரியா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கர் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை மத்திய 2025 செப்டம்பர் 29 அன்று வரவேற்றது. இந்த அறிவிப்புகள் அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி இப்போது 2025 அக்டோபர் 28-ம் தேதியிலிருந்து நவம்பர் 4-ம் தேதி (செவ்வாய்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் நிறுவனங்களிடமிருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவர்கள் dbtyas-sports.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டு மேம்பாட்டு வாரியங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் போன்றவற்றுக்கும் இது தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 04-ம் தேதிக்குப் பிறகு பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்படாது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183374
***
SS/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2183487)
வருகையாளர் எண்ணிக்கை : 70