உள்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் கடல்சார் தொலைநோக்குப் பார்வை, பாதுகாப்பு, ஸ்த்ரத்தன்மை, தற்சார்பு ஆகிய 3 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது : மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
27 OCT 2025 4:37PM by PIB Chennai
இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் மும்பை கடல்சார் செயல்பாட்டிலும் உலகின் நுழைவு வாயிலாக உருவெடுக்க உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்திய கடல்சார் வாரம் 2025-ஐ தொடங்கி வைத்து அவர் பேசினார். கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வலுவான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உலகில் வலுவான கடற்படையைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் கடலோர எல்லைகள் 11,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ளது என்றும் 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் வரை பங்களிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 23.7 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலம் உலக அளவில் உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது என்று அவர் கூறினார். கடலோர மாநிலங்களில் 80 கோடி மக்கள் வசிப்பதாக அவர் தெரிவித்தார்.
உலக அளவில் கடல்சார் ஏற்றுமதியில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள 38 நாடுகள் 12 சதவீதம் அளவிற்கு பங்களிப்பதாக அவர் கூறினார். இந்த நிகழ்ச்சி கடல்சார் தொழில்துறையில் வலுவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் உலகஅளவிலான முதலீட்டாளர்களுக்கு இங்குள்ள வாய்ப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் கடற்படை திறன் உள்நாட்டு ஸ்த்ரத்தன்மை, கடல்சார் வாய்ப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இந்தோ - பசிபிக் மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே இந்தியா முக்கியப் பாலமாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் கடல்சார் வரலாறு 5,000 ஆண்டுகள் பழமையானது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் புதிய கடல்சார் வரலாறு படைக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளது இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளது என்றும் பிராந்திய ஸ்த்தரத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு முக்கியத் தளமாக அமைந்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182946
***
SS/SV/KPG/SH
(Release ID: 2183054)
Visitor Counter : 11
Read this release in:
Odia
,
हिन्दी
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada