பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத் பண்டிகை தொடங்குவதையொட்டி பிரதமர் வாழ்த்து

Posted On: 25 OCT 2025 9:06AM by PIB Chennai

நஹய்-காய் என்ற பாரம்பரியச் சடங்குடன் இன்று தொடங்கும் சத் பண்டிகை  புனித நிகழ்வை முன்னிட்டு, நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அனைத்து விரதங்களின் அசைக்க முடியாத பக்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளதுடன், இந்த நான்கு நாள் பண்டிகையின் ஆழ்ந்த கலாச்சார முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.

சத் பண்டிகை உலகளவில் அங்கீகாரம் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள திரு  மோடிஉலகெங்கிலும் உள்ள இந்தியக் குடும்பங்கள் அதன் சடங்குகளில் இதயப்பூர்வமான பக்தியுடன் பங்கேற்கின்றன என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், சாத்தி மையாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்அதன் ஆன்மீக அதிர்வுகளில் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:

"நான்கு நாள் நடைபெறும் சத் திருவிழா இன்று நஹய்-காய் புனித சடங்குடன் தொடங்குகிறது. பீகார் உள்பட நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். விரதத்தைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களும் மரியாதையும்!"

"நமது கலாச்சாரத்தின் இந்தப் பிரமாண்டமான திருவிழா எளிமை மற்றும் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது, அதன் தூய்மை மற்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது ஒப்பிடமுடியாதது. இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில் சத் மலைகளில் காணப்படும் காட்சிகள் குடும்பம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு அற்புதமான உத்வேகமாகும். சத் பண்டைய பாரம்பரியம் நமது சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது."

"இன்று, சத் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு பிரமாண்டமான கலாச்சார விழாவாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் இந்தியக் குடும்பங்கள் அதன் மரபுகளில் முழு மனதுடன் பங்கேற்கின்றன. சாத்தி மையா அனைவருக்கும் தனது நிறைவான ஆசீர்வாதங்களை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

"சத் மஹாபர்வ் என்பது நம்பிக்கை, வழிபாடு மற்றும் இயற்கை மீதான அன்பு ஆகியவற்றின் தனித்துவமான சங்கமம். அஸ்தமனம் மற்றும் உதய சூரியனுக்கு பிரசாதம் வழங்கப்படும் அதே வேளையில், பிரசாதம் இயற்கையின் பல்வேறு வண்ணங்களையும் உள்ளடக்கியது. சத் பூஜையின் பாடல்கள் மற்றும் மெல்லிசைகள் பக்தி மற்றும் இயற்கையின் அற்புதமான உணர்வால் நிரப்பப்பட்டுள்ளன."

"நேற்றுதான், பேகுசராய்க்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். பீகார் கோகிலா சாரதா சின்ஹா ஜிக்கு பேகுசராயுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. சாரதா சின்ஹா ஜி மற்றும் பீகாரின் பல நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் பாடல்கள் மூலம் சத் திருவிழாவிற்கு ஒரு தனித்துவமான உணர்வைச் சேர்த்துள்ளனர்."

"இன்று, இந்த மாபெரும் விழாவில், அனைவரையும் மயக்கும் சாத்தி மையாவின் அனைத்து பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். https://m.youtube.com/watch?v=6e6Hp6R5SVU

***

(Release ID: 2182370)

AD/PKV/RJ


(Release ID: 2182431) Visitor Counter : 11