இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டுகளில் போதைப்பொருள் உபயோகத்திற்கு எதிரான அமைப்பின் துணைத் தலைமைத்துவமாக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது
Posted On:
23 OCT 2025 12:26PM by PIB Chennai
பாரீசில் யுனெஸ்கோ தலைமையகத்தில் 2025 அக்டோபர் 20 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற விளையாட்டுகளில் போதைப்பொருள் உபயோகத்திற்கு எதிரான அமைப்பின் மாநாட்டின் 10-வது அமர்வில், இந்தியா பங்கேற்றது.
இந்தியாவின் சார்பில், விளையாட்டுத்துறை செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ், தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை தலைமை இயக்குநர் திரு ஆனந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள 190 நாடுகளின் பிரதிநிதிகள் ஆப்பிரிக்க யூனியன், சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு, உலக போதைப் பொருள் தடுப்பு ஆணையம் மற்றும் இதர சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது 2025-2027-ம் ஆண்டுக்கான விளையாட்டுகளில் போதைப் பொருள் உபயோகத்திற்கு எதிரான ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் (குழு-4) துணைத்தலைமைத்துவமாக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமைத்துவமாக அஜர்பைஜான் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரேசில், ஜாம்பியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் தங்களது பிராந்திய குழுமங்களில் துணை தலைமைத்துவ நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். யுனெஸ்கோவிற்கான நிரந்தர பிரதிநிதிகள், போதைப்பொருள் தடுப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றில் 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். விளையாட்டுகளில் போதைப் பொருள் உபயோகத்தைத் தடுப்பதற்கான நிதி அமைப்பிற்கு நிதி வழங்கல், நிர்வாகம் மற்றும் இணக்கத்தை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மரபணு கையாளுதல், பாரம்பரிய மருந்தியல் மற்றும் விளையாட்டுகளில் நெறிமுறை பரிசீலனைகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் சவால்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181739
***
SS/IR/KPG/SG
(Release ID: 2181933)
Visitor Counter : 6