சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடு தழுவிய சிபிஆர் விழிப்புணர்வு வாரம்

Posted On: 22 OCT 2025 2:58PM by PIB Chennai

சிபிஆர் எனப்படும்  இருதய நுரையீரல் அழுத்த மறுமலர்ச்சி குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அக்டோபர் 13 முதல் 17 வரை நடத்தியது.  இந்த முயற்சி கடுமையான நெஞ்சுவலி மற்றும் பிற மருத்துவ அவசர நிலைகளின் போது பொதுமக்கள் உடனடியாக உதவி புரிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களை உணர வைப்பதை நோக்கமாகக் கொண்டது.

சிபிஆர்-ன் நிரூபிக்கப்பட்ட உயிர்காக்கும் திறன் இருந்தபோதிலும், இந்தியாவின் பொதுமக்கள் அளிக்கும் சிபிஆர் விகிதங்கள் உலகத் தரங்களை விட குறைவாகவே உள்ளன. இந்த ஒரு வார கால முயற்சியில், பல்வேறு மக்கள்தொகை குழுக்களிடையே பரவலான சிபிஆர் பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் நடத்தை தயார்நிலையை ஊக்குவிப்பதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க அமைச்சகம் முயன்றது.

ஒரு முக்கியமான உயிர்காக்கும் நடவடிக்கையாக சிபிஆர்-ன்  முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல், பல்வேறு பங்குதாரர்கள் மூலம் நடைமுறை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கங்களை வழங்குதல், தன்னார்வத் தொண்டு மற்றும் சமூகத் தயார்நிலையில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் பரந்த அளவிலான பொது தொடர்பு மற்றும் ஈடுபாட்டை அடைய டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை சிபிஆர் விழிப்புணர்வு வாரத்தின் நோக்கங்களாகும்.

நாடு முழுவதும் நடைபெற்ற, இந்த பன்முக நடவடிக்கைகள் மூலம், சிபிஆர் விழிப்புணர்வு வாரத்தில் 7,47,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் 6,06,374-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு  பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181476

***

SS/PKV/SH


(Release ID: 2181607) Visitor Counter : 7