பிரதமர் அலுவலகம்
இந்தியப் பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் அழைப்பு
प्रविष्टि तिथि:
19 OCT 2025 8:36PM by PIB Chennai
140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைக் கொண்டாடும் வகையில், இந்தியப் பொருட்களை வாங்குவதன் மூலம், இந்தப் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். "இந்தியப் பொருட்களை வாங்கி, அது சுதேசி என்று பெருமையுடன் சொல்வோம்! நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் மற்றவர்களும் இதைச் செய்யத் தூண்டுவீர்கள்" என்று திரு. மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைக் கொண்டாடும் வகையில் இந்தப் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுவோம்.
இந்தியப் பொருட்களை வாங்கி, அது சுதேசி என்று பெருமையுடன் சொல்வோம்!
சமூக ஊடகங்களில் நீங்கள் வாங்கியதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் மற்றவர்களும் இதைச் செய்யத் தூண்டுவீர்கள்."
***
AD/PKV/SH
(रिलीज़ आईडी: 2180960)
आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam