குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் சீர்திருத்தங்கள், இளையோருக்கு அதிகாரமளித்தல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கான முயற்சிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் பாராட்டு

Posted On: 14 OCT 2025 4:52PM by PIB Chennai

புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே மற்றும் அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் முக்கிய முன் முயற்சிகள், கொள்கை சீர்திருத்தங்கள் குறித்து குடியரசு துணைத்தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. சிறப்பான பணி சூழலை உறுதி செய்வதற்கும், பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நல்லிணம் மிக்க தொழில்துறை உறவுகளை வளர்ப்பதற்கும் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் விரிவான முன்முயற்சிகளை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார். அத்துடன் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகளுக்கும் குடியரசு துணைத்தலைவர் பாராட்டுத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178949

 

***

SS/IR/KPG/SH


(Release ID: 2179125) Visitor Counter : 14