பிரதமர் அலுவலகம்
பிணைக் கைதிகளின் விடுதலையை பிரதமர் வரவேற்றிருக்கிறார்; பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிபர் திரு டிரம்பின் போற்றத்தக்க முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்
Posted On:
13 OCT 2025 7:19PM by PIB Chennai
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர்களின் விடுதலை, அவர்களது குடும்பத்தினரின் துணிச்சல், அதிபர் திரு டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான முயற்சிகள் மற்றும் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் உறுதிபாட்டிற்குக் கிடைத்துள்ள மரியாதை என்று அவர் கூறினார்.
பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்காக அதிபர் திரு டிரம்பின் போற்றத்தக்க முயற்சிகளுக்கு திரு மோடி ஆதரவு தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:
“இரண்டு ஆண்டுகால சிறை பிடிப்பிற்கு பிறகு அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் விடுதலை, அவர்களது குடும்பத்தினரின் துணிச்சல், அதிபர் திரு டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான உறுதியான முயற்சிகள் மற்றும் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் வலிமையான உறுதிபாட்டிற்குக் கிடைத்துள்ள மரியாதையாகும். பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்காக அதிபர் திரு டிரம்பின் போற்றத்தக்க முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.
@POTUS
@realDonaldTrump
@netanyahu”
(Release ID: 2178619)
SS/BR/SH
(Release ID: 2178712)
Visitor Counter : 5