சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சரியான தருணத்தில் இதயத்துடிப்பு – சுவாச மீட்பு முறை (சிபிஆர்) செய்வதன் மூலம் உயிர்ப்பிக்க முடியும் – மத்திய சுகாதாரச் செயலர்
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2025 1:14PM by PIB Chennai
கடுமையான இதயக் கோளாறு உடைய நபர்களுக்கு சிபிஆர் எனப்படும் இதயத் துடிப்பு – சுவாசத்தை மீட்டெடுப்பதற்கான முதலுதவி சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிர்க் காக்க முடியும். இது குறித்த விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் சிபிஆர் விழிப்புணர்வு வாரத்தை இன்று (13.10.2025) தொடங்கியுள்ளது. இந்த விழிப்புணர்வு வாரத்தில் சிபிஆர் முதலுதவி சிகிச்சை முறை குறித்து சமுதாயப் பங்களிப்புடன் உரிய பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய சுகாதாரத்துறைச் செயலர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவத்சவா தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கடும் இதயக் கோளாறு காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த சிபிஆர் முதலுதவி சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கைகளைக் கொண்டு அளிக்கப்படும் இந்த எளிய சிகிச்சை முறை ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் அனைத்து முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவிடும். இதன் மூலம் இதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட நபரின் வாழ்வை மீட்டெடுக்க முடியும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178384
***
SS/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2178664)
வருகையாளர் எண்ணிக்கை : 34