மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தின் கீழ் உள்ளூர் அளவில் கால்நடைகள் ஆரோக்கியம் குறித்த இயக்கங்கள் தொடங்கப்படும் பிரதமர் திரு நரேந்திர மோடி
Posted On:
12 OCT 2025 12:26PM by PIB Chennai
இந்தியாவின் கால்நடை, பால்வளத் துறைகளுக்குப் பெரும் உத்வேகத்தை அளிக்கும் வகையில், ₹947 கோடி மதிப்புள்ள திட்டங்கள் நேற்று (அக்டோபர் 11, 2025) புதுதில்லியில் தொடங்கி வைக்கப்பட்டன. ₹219 கோடி மதிப்புள்ள கூடுதல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. விவசாயம், அதனுடன் தொடர்புடைய பிற துறைகளில் ஒரு பெரிய முதலீடாக இந்த முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதற்கும், வேளாண் சார்ந்த துறைகளில் இந்தியாவின் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பிரதமரின் தன தானிய வேளாண் திட்டம், பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைவதற்கான இயக்கம் ஆகிய இரண்டு முக்கிய விவசாயத் திட்டங்கள் தொடங்கப்பட்டதோடு, பல திட்டங்கள் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தின் கீழ் கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதில் கால்நடைகள், மீன்வளம், அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை எடுத்துரைத்தார். இத்திட்டம் நமது கால்நடைகளிலும் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார். கால், வாய் நோய் போன்ற நோய்களிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க 125 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்ர. இதன் காரணமாக, விலங்குகள் ஆரோக்கியமாகி, விவசாயிகளின் கவலைகள் குறைந்துள்ளன என்று அவர் தெரிவித்தர். பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தின் கீழ், உள்ளூர் நிலையிலும் கால்நடைகளின் சுகாதாரம் தொடர்பான இயக்கங்கள் தொடங்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் , ₹28.93 கோடி முதலீட்டில் அசாமின் குவஹாத்தியில் நிறுவப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்தில் முதல் கால்நடை செயற்கை கருத்தரிப்பு (IVF) ஆய்வகத்தின் திறப்பு விழாவும் இந்த நிகழ்ச்சியின்போது நடைபெற்றது. இந்த அதிநவீன வசதி, வடகிழக்கு மாநிலங்களில் பால்வள மேம்பாட்டிற்கு பெரிய உத்வேகத்தை அளிக்கும்.
தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) கீழ், பல பெரிய அளவிலான பால் உள்கட்டமைப்பு திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. இவற்றில் ₹460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 120 மெட்ரிக் டன் பால் பவுடர் ஆலை, இந்தூர் பால் யூனியனால் நிறுவப்பட்ட பால் பவுடர் ஆலை உள்ளிட்டவை அடங்கும்.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ், பல மாநிலங்களில் ₹303.81 கோடி மதிப்பிலான 10 திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த முயற்சிகள், விவசாயம் சார்ந்த துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மூலம் விவசாயிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், அனைவருக்கும் பொருளாதார பாதுகாப்பையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதற்கும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன.
****
(Release ID: 2178028)
AD/PLM/SG
(Release ID: 2178073)
Visitor Counter : 13