விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, இரண்டு முக்கிய வேளாண் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
இரு திட்டங்களும் விவசாயிகளுக்கு செழிப்பை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகள்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்
Posted On:
11 OCT 2025 5:51PM by PIB Chennai
தில்லியின் பூசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயத்துக்கும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்குமான திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி ஆகியோர் பிரதமருடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கால்நடை வளர்ப்பிலும் மீன்வளத்துறையிலும் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குழுக்களுடன் பிரதமர் நேரடியாக உரையாடினார். இந்த நிகழ்வில் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு அவர்களின் பிறந்தநாளில் மரியாதை செலுத்தப்பட்டது.
'பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டம், 'பருப்பு வகைகளில் தற்சார்பு இயக்கம்' ஆகிய இரு திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டிருப்பது இந்தியாவின் விவசாயப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய, மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
உலகளாவிய உர விலை உயர்வு இந்திய விவசாயிகளைப் பாதிக்காமல் பிரதமர் பார்த்துக் கொண்டதாக அமைச்சர் கூறினார். விவசாய இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நவீன உபகரணங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்கியுள்ளது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
முக்கிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளதை திரு சௌகான் எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், ₹3.90 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்டுள்ள இரு திட்டங்களும் விவசாயிகளுக்கு செழிப்பை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகள் என்று மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.
***
(Release ID: 2177834)
AD/PLM/RJ
(Release ID: 2177899)
Visitor Counter : 4