ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகளுக்கான அதிநவீன மையம் - மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

பண்டிகைக் காலங்களில் பயணிகளுக்கு இந்த மையம் அதிக வசதிகளை வழங்கும் - நாடு முழுவதும் பிற ரயில் நிலையங்களிலும் இந்த மையங்கள் மேம்படுத்தப்படும்: திரு அஸ்வினி வைஷ்ணவ்

Posted On: 11 OCT 2025 2:34PM by PIB Chennai

நாட்டின் மிகவும் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான புதுதில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் அனுபவத்தை கணிசமாக அதிகரிக்கும் வகையில் அந்த ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட யாத்ரி சுவிதா கேந்திரா எனப்படும் பயணிகளுக்கான மையத்தை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று (11.10.2025) ஆய்வு செய்தார். இந்த மையம், சுமார் 7,000 பயணிகளுக்கு இட வசதி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதிதாக உருவாக்கப்பட்ட அதிநவீன மையம், பண்டிகைக் காலங்களில் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும் இது போன்ற நவீன பயணிகள் வசதி மையம், நாட்டின் பிற ரயில் நிலையங்களிலும் அமைக்கப்படும் என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வடக்கு ரயில்வே, விரிவான, நவீன வசதிகளுடன் கூடிய மையத்தை அமைத்துள்ளது.

டிக்கெட் விற்பனை: 22 நவீன டிக்கெட் கவுண்ட்டர்கள், 25 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது

சுகாதாரம், தண்ணீர்: 652 சதுர மீட்டரில் கட்டப்பட்ட பிரத்யேக கழிவறைப் பகுதி உள்ளதுசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பும் இந்த மையத்தில் உள்ளது.

தகவல் அமைப்பு: 24 ஸ்பீக்கர்கள், மூன்று எல்இடி திரைகளில் ரயில்களின் தகவல்கள்.

பாதுகாப்பு: 18 சிசிடிவி கேமராக்கள், 5 லக்கேஜ் ஸ்கேனர்கள், 5 டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் (DFMD) உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன.

இந்த ஆய்வின்போது மத்திய அமைச்சருடன் ரயில்வே வாரியத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு சதீஷ் குமார், வடக்கு ரயில்வே பொது மேலாளர் திரு அசோக் குமார் வர்மா, பிற மூத்த ரயில்வே அலுவலர்களும் உடன் இருந்தனர்.

***

(Release ID: 2177759)

AD/PLM/RJ


(Release ID: 2177864) Visitor Counter : 8