பிரதமர் அலுவலகம்
விமானப்படை தினத்தையொட்டி விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
08 OCT 2025 9:58AM by PIB Chennai
விமானப்படை தினத்தையொட்டி துணிச்சல்மிக்க அனைத்து விமானப்படை வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“விமானப்படை தினத்தையொட்டி அனைத்து துணிச்சல்மிக்க விமானப்படை வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். இந்திய விமானப்படை துணிச்சல், ஒழுக்கம் மற்றும் துல்லியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சவால்கள் நிறைந்த சூழல்கள் உட்பட நமது வான்வெளியை பாதுகாப்பதில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இயற்கை பேரிடரின் போது அவர்களுடைய பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, தொழில்முறைத் திறன் மற்றும் வெல்ல முடியாத உத்வேகம் தொடர்ந்து ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்கிறது.”
***
(Release ID: 2176088)
SS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2176159)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam