பிரதமர் அலுவலகம்
அதிபர் திரு புதினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருடன் பேசி, வாழ்த்து தெரிவித்தார்
இந்திய-ரஷ்ய சிறப்புரிமை பெற்ற உத்திசார் கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்த தலைவர்கள் இருவரும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள்
அதிபர் திரு புதினை இந்தியாவில் வரவேற்க தாம் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்
प्रविष्टि तिथि:
07 OCT 2025 6:47PM by PIB Chennai
ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
அதிபர் திரு புதினின் 73-வது பிறந்தநாளையொட்டி அவர் நல்ல ஆரோக்கியதுடன், தனது முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இரு தரப்பு திட்டங்களின் முன்னேற்றங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான சிறப்பான மற்றும் சிறப்புரிமை பெற்ற உத்திசார் கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்துவதில் தங்களது உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள்.
இந்தியாவில் நடைபெற உள்ள 23-வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் அதிபர் திரு புதினை வரவேற்கத் தாம் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2175955)
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2176113)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam