நிதி அமைச்சகம்
எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தும் நோக்கில் ஐஎஃப்எஸ்சி குறியீடுகளை பதிவு செய்வதற்கு கணினி அடிப்படையிலான அனுமதி அறிமுகம்: சிபிஐசி
प्रविष्टि तिथि:
07 OCT 2025 4:11PM by PIB Chennai
வர்த்தக வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், சுங்க நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையிலும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் கணினி அடிப்படையில் ஐஎஃப்எஸ்சி குறியீடுகளை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
புதிய முயற்சியாக, ஒரே வங்கி கணக்கு மற்றும் அதன் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை இறக்குமதி, ஏற்றுமதி குறியீட்டுடன் இணைப்பதற்கான பதிவுகளுக்கு தானியங்கி முறையில் அனுமதி வழங்கப்படவுள்ளது. ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி பெறப்பட்ட இந்த குறியீடுகள் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள சுங்கத்துறை அலுவலகங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் துறைமுக அதிகாரியின் தலையீடு முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறையின் நோக்கங்கள் பின்வருமாறு:
- வங்கி கணக்கு எண் மற்றும் அதன் ஐஎஃப்எஸ்சி குறியீட்டிற்கான அனுமதி நடைமுறைகளில் விரைவான செயல்பாடுகள்
- பல்வேறு துறைமுகங்களில் பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்துதல்
- ஏற்றுமதியாளர்களின் வங்கிக் கணக்குகளில் ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகைகளை விரைவாகவும், தடையின்றியும் வரவு வைப்பது உறுதிசெய்யப்படும்.
- ஒட்டுமொத்த வர்த்தக நடைமுறைகளின் திறன்கள் மேம்படுத்தப்படும்
சுங்கத்துறையின் தானியங்கி நடைமுறைகளில் ஏற்றுமதியாளர் தங்களது வங்கி கணக்கை பதிவு செய்துகொள்வதன் மூலம் ஏற்றுமதி தொடர்பான பயன்பாடுகளை எளிதாக பெற இது வகைசெய்கிறது. மேலும் ஐசிஇஜிஏடிஇ என்ற இணைய தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட டீலராக ஆன்லைன் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள ஏற்றுமதியாளர்களுக்கு இந்த நடைமுறை அமலில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175805
***
SS/SV/AG/SH
(रिलीज़ आईडी: 2175995)
आगंतुक पटल : 29