பிரதமர் அலுவலகம்
வயது வந்தோர் கல்வியை மாற்றியமைத்து, எழுத்தறிவு இலக்குகளை மேம்படுத்தும் திட்டத்தை குறித்த கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
06 OCT 2025 12:27PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் ஒரு முக்கிய முன்முயற்சியாக 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, 'சமூகத்தில் அனைவருக்கும் வாழ்நாள் கற்றல் குறித்த புரிதல்' (ULLAS) திட்டத்தின் மாற்றத்தக்க தாக்கத்தைப் பாராட்டி கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இத்திட்டம் இந்தியா முழுவதும் உள்ள வயது வந்தோருக்கான கல்வி வாய்ப்புகளை, குறிப்பாகக் கிராமப்புறச் சமூகங்கள் மற்றும் பெண்களை மையப்படுத்தி, குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரியின் எக்ஸ் தளப் பதிவுக்குப் பதிலளித்து பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
“இந்தக் கட்டுரையில், மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி @jayantrld, தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்து 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'சமூகத்தில் அனைவருக்கும் வாழ்நாள் கற்றல் குறித்த புரிதல்' (ULLAS) திட்டம், வயது வந்தோருக்கான கல்வி வாய்ப்புகளை எவ்வாறு வழங்குகிறது என்பதை விளக்குகிறார்.
ULLAS திட்டத்தின் தாக்கத்தால் கிராமப்புற மற்றும் பெண் எழுத்தறிவு உயர்ந்துள்ளது என்றும், ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் உள்ள எழுத்தறிவு இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடைய இந்தியா சரியான பாதையில் செல்கிறது என்றும் அவர் எடுத்துரைக்கிறார்.”
***
(Release ID: 2175252 )
SS/EA/KR
(रिलीज़ आईडी: 2175392)
आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam