கூட்டுறவு அமைச்சகம்
மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் சர்க்கரை ஆலையின் விரிவாக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விக்கே
பாட்டீல் மற்றும் பத்ம பூஷன் பாலாசாகேப் விக்கே
பாட்டீல் ஆகியோரின் சிலைகளையும் திறந்து வைத்தார்
Posted On:
05 OCT 2025 6:36PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் பிரவாரா சர்க்கரை ஆலையின் விரிவாக்கப்பட்ட வசதியை துவக்கி வைத்தார். மேலும் பத்ம ஸ்ரீ டாக்டர் விதல்ராவ் விக்கே பாட்டீல் மற்றும் பத்ம பூஷண் பாலாசாகேப் விக்கே பாட்டீல் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்நாவிஸ், துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரு அஜித் பவார், மற்றும் மத்திய கூட்டுறவு இணையமைச்சர் திரு முர்லிதர் மோஹோல் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அஹில்யாநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், சத்ரபதி சிவாஜி மகாராஜை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே ஔரங்காபாத்தை சம்பாஜிநகர் என்றும் அகமதுநகரை அஹில்யாநகர் என்றும் மறுபெயரிடும் தைரியம் இருக்கும் என்று கூறினார். இந்த முறை, மகாராஷ்டிராவில் 60 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்களும் பயிர்களும் கனமழை காரணமாக அழிந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பங்கின் கீழ், மகாராஷ்டிராவிற்கு ரூ.3,132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் ரூ.1,631 கோடி ஏப்ரலிலேயே திரு மோடி அரசால் விடுவிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா அரசு ரூ.2,215 கோடி நிவாரண தொகுப்பை அறிவித்தது, இதனால் 31 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10,000 பணமாகவும் 35 கிலோ உணவு தானியங்களாகவும் வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், குறுகிய கால விவசாய கடன்களின் வசூல் இடைநிறுத்தப்பட்டுள்ளது, நில வருவாய் மற்றும் பள்ளி தேர்வுகளில் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா அரசு விரிவான அறிக்கையை அனுப்பிய உடனேயே, மாநிலத்திலிருந்து விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடியிடமிருந்து ஒரு கணம் கூட தாமதம் இருக்காது என்று பிரதமரின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்தார். மகாராஷ்டிரா மக்கள் விவசாயிகளைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததால் இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பத்ம ஸ்ரீ டாக்டர் விதல்ராவ் விக்கே பாட்டீல் மற்றும் பத்ம பூஷண் பாலாசாகேப் விக்கே பாட்டீல் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்து பேசுகையில், பத்ம ஸ்ரீ விக்கே பாட்டீல் தனது முழு வாழ்க்கையையும் இந்த பகுதி மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணித்தார் என்று திரு அமித் ஷா தெரிவித்தார். டாக்டர். விதல்ராவ் விக்கே பாட்டீல் இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்றும் அவர் கூறினார்.
பத்ம ஸ்ரீ விக்கே பாட்டீல் உலகின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவினார் என்றும், இந்த முன்முயற்சி மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் விவசாயிகளின் செழிப்புக்கு வழிவகுத்தது என்றும் திரு அமித் ஷா கூறினார். சர்க்கரை ஆலைகளின் லாபம் வர்த்தகர்களின் பைகளுக்குப் பதிலாக விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்குச் செல்லும் முறையை முன்னோடியாக உருவாக்கியவர் பத்ம ஸ்ரீ டாக்டர் விதல்ராவ் விக்கே பாட்டீல் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175105
***
SS/VK/KR
(Release ID: 2175263)
Visitor Counter : 8