பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேபாளத்தில் கனமழையால் உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 05 OCT 2025 4:20PM by PIB Chennai

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு  பிரதமர் திரு. நரேந்திர மோடி  ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.   இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்களுக்கும் அரசுக்கும் இந்தியாவின் உறுதியான ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். நெருக்கடி காலங்களில் நட்புகொண்ட அண்டை நாடு மற்றும் முதலாவதாக  உதவும் நாடு என்பதை  சுட்டிக்காட்டி, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா உறுதியாக இருப்பதாக திரு. மோடி மேலும் தெரிவித்துள்ளார்.                                                                        

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், திரு. மோடி வெளியிட்டுள்ள பதிவில் "நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் மனதிற்கு மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளன. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் நேபாள மக்கள் மற்றும் அரசுடன் இருக்கிறோம். நட்பு கொண்ட அண்டை நாடு முதலில் என்ற கொள்கைப்படி, தேவைப்படக்கூடிய எந்த உதவியையும் வழங்க இந்தியா உறுதியாக உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2175013)

AD/VK/RJ


(रिलीज़ आईडी: 2175137) आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali-TR , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam