கூட்டுறவு அமைச்சகம்
ஹரியாணாவின் ரோத்தக்கில் சபர் பால் பண்ணையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
Posted On:
03 OCT 2025 3:49PM by PIB Chennai
ஹரியாணாவின் ரோத்தக்கில் சபர் பால் பண்ணையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (03.10.2025) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஹரியாணாவின் முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி, மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர் திரு கிருஷ்ணா பால், மத்திய அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய கூட்டுறவு அமைச்சகம், நாட்டின் அனைத்து மாநில அரசுகளுடன் சேர்ந்து கூட்டுறவுகளின் அடித்தளத்தை வலுப்படுத்த பாடுபட்டுள்ளது என்றார். 2029-ம் ஆண்டுக்குள், நாட்டின் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு கூட்டுறவு சங்கம் இருக்கும் என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுமார் 350 கோடி ரூபாய் செலவில் நாட்டின் மிகப்பெரிய தயிர், மோர் மற்றும் யோகர்ட் உற்பத்தி செய்யும் சபர் பால் பண்ணை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார். சபர் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தயிர், 10 மெட்ரிக் டன் யோகர்ட் , 3 லட்சம் லிட்டர் மோர், 10,000 கிலோகிராம் இனிப்புகள் உற்பத்தி செய்யப்படும். இது விவசாயிகளின் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், இந்தியாவின் பால்வளத் துறை கடந்த 11 ஆண்டுகளில் 70 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பால்வளத் துறையாக மாறியுள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார். வெண்மைப் புரட்சி 2.0-ன் கீழ், வரும் நாட்களில் நாடு முழுவதும் 75,000-க்கும் அதிகமான பால்வள கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும் என்றும், 46,000 பால்வள கூட்டுறவு சங்கங்களை அரசு வலுப்படுத்தும் என்றும் திரு ஷா தெரிவித்தார். நமது பால் பதப்படுத்தும் திறன் தற்போது ஒரு நாளைக்கு 660 லட்சம் லிட்டர் என்றும், 2028–29க்குள் இதை 100 மில்லியன் லிட்டராக உயர்த்துவதே இலக்கு என்றும் அவர் கூறினார். இந்த இலக்கை அடைந்தவுடன், அனைத்து லாபங்களும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நமது விவசாயத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வரும் நாட்களில், பால் பண்ணைகளை நிர்மாணிப்பதில் இந்தியா தன்னிறைவு பெறுவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இதற்காக, பால் பண்ணை கட்டுமானம் மற்றும் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மூன்று மடங்கு துரிதப்படுத்தி வருவதாகவும் திரு ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174456
***
AD/SMB/SH
(Release ID: 2174631)
Visitor Counter : 7