பிரதமர் அலுவலகம்
காசா மோதலில் அதிபர் டிரம்பின் அமைதி முன் முயற்சிக்கு பிரதமர் வரவேற்பு
प्रविष्टि तिथि:
30 SEP 2025 9:00AM by PIB Chennai
காசா மோதலை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டொனால்டு ஜே டிரம்பின் விரிவான திட்டம் குறித்த அறிவிப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் பாலஸ்தீனம், இஸ்ரேல் மக்கள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தின் பெருமளவு பகுதியில் நீண்ட கால மற்றும் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு சாத்தியமிக்க வழிவகைகளை அளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலவச்செய்யவும் அதிபர் டிரம்பின் முன் முயற்சிக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து ஆதரவு அளிப்பார்கள் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“காசா மோதலை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டொனால்டு ஜே டிரம்பின் விரிவான திட்டம் குறித்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இத்திட்டம் பாலஸ்தீனம், இஸ்ரேல் மக்கள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தின் பெருமளவு பகுதியில் நீண்ட கால மற்றும் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு சாத்தியமிக்க வழிவகைகளை அளிக்கும். மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலவச்செய்யவும் அதிபர் டிரம்பின் முன் முயற்சிக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து ஆதரவு அளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”
***
(Release ID: 2172938 )
SS/IR/AG/RJ
(रिलीज़ आईडी: 2173022)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam