பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிக்காவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                13 SEP 2025 8:35PM by PIB Chennai
                
                
                
                
                
                
                அசாமின்  குவஹாத்தியில், பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிக்காவின் நூற்றாண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இன்றைய தினம் சிறப்புமிக்க தினம் என்றும், இத்தருணம் உண்மையிலேயே மதிப்புமிக்கது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தாம் கண்ட கலை நிகழ்ச்சிகள், உற்சாகம் மற்றும் ஒருங்கிணைப்பு தம்மை நெகழச் செய்ததாக்க்  கூறினார். இந்நிகழ்வில் இசைக்கப்பட்ட பூபேன் தாவின் இசை குறித்து அவர் எடுத்துரைத்தார். அவருடைய பாடலின் சில வார்த்தைகள் தமது மனதில் எதிரொலிப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரையும் தாம் மனமார பாராட்டுவதாக அவர் தெரிவித்தார். 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, செப்டம்பர் 8 அன்று, பூபேன் ஹசாரிக்காவின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார். அந்நாளில் பூபேன் ஹசாரிக்காவை கௌரவிக்கும் வகையில் தனது எண்ணங்களை கட்டுரையாக எழுதியது குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.  பூபேன் தாவின் நூற்றாண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பது தமக்கு கிடைத்த பெருமை என்று அவர் கூறினார். மெல்லிசை மூலம் இந்தியாவை இணைத்து தலைமுறைகளை தூண்டக்கூடிய அழியாத பாடல்களை பூபேன் தா உருவாக்கினார் என்று சுட்டிக்காட்டிய திரு மோடி, நம்மிடையே பூபேன் தா இல்லையென்றாலும் அவருடைய பாடல்களும், குரலும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு தொடர்ந்து சக்தி அளிக்கும் என்று கூறினார். பூபேன் தாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை கொண்டாடுவதில் அரசு பெருமைப்படுவதாக தெரிவித்தார். பூபேன் ஹசாரிக்காவின் பாடல்கள், செய்திகள், வாழ்க்கைப் பயணம் ஆகியவை ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் பூபேன் ஹசாரிக்காவுக்கு மரியாதை செலுத்திய திரு மோடி, பூபேன் தாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி அசாம் மக்களுக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். 
இசை சேவைக்காக பூபேன் ஹசாரிக்கா தமது வாழக்கை முழுவதையும் அர்ப்பணித்தார் என்று குறிப்பிட்ட பிரதமர், இசை என்பது ஆன்மிக பயிற்சி வடிவமாக மாறும்போது, அது ஆன்மாவை அடைவதாகவும், சமூகத்திற்கு வழிகாட்டுவதற்கான ஊடகமாக திகழ்வதாகவும் அவர் கூறினார். அதனால் தான் பூபேன் தாவின் இசை சிறப்பானது என்று அவர் சுட்டிக்காட்டினார். 
நாட்டின் இலக்குகளுக்காக பூபேன் தா தமது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்ததாக தெரிவித்த திரு மோடி, பூபேன் தாவின் நூற்றாண்டு பிறந்த தின நிகழ்ச்சியில், நாட்டின் தற்சார்புக்காக நாம் அவசியம் உறுதி ஏற்க வேண்டும் என்று கூறினார். உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற இயக்கத்தின் தூதர்களாக அசாமின் சகோதர சகோதரிகள் திகழ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதை பெருமையாக கருதுமாறு வலியுறுத்திய பிரதமர், உள்ளூர் பொருட்களை மட்டுமே அனைவரும் வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த இயக்கங்களை நாம் விரைவாக துரிதப்படுத்தும் போது வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு விரைவில் நிறைவேறும் என்று அவர் குறிப்பிட்டார். 
இந்நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லட்சுமன் பிரசாத் ஆச்சாரியா, முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா ஷர்மா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு, மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
***
(Release ID: 2166397)
SS/IR/RJ
                
                
                
                
                
                (Release ID: 2172606)
                Visitor Counter : 6
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam