பிரதமர் அலுவலகம்
செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் ஒடிசாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்
ஜார்சுகுடாவில் சுமார் ரூ. 60,000 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
தேசிய தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சுதேசி தொழில்நுட்பத்துடன் சுமார் ரூ.37,000 கோடி செலவில் கட்டப்பட்ட 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்பேசி கோபுரங்களை பிரதமர் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளார்
தொலைதூர, எல்லைப் பகுதிகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 26,700 க்கும் மேற்பட்ட இணைக்கப்படாத கிராமங்களும் இணைப்பைப் பெற உள்ளன
Posted On:
26 SEP 2025 8:58PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 27-ம் தேதி ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், ஜார்சுகுடாவில் ஏறத்தாழ ரூ.60,000 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வின்போது அவர் ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார். இந்தத் திட்டங்கள் தொலைத்தொடர்பு, ரயில்வே, உயர்கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, கிராமப்புற வீட்டுவசதித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைந்துள்ளன.
தொலைத்தொடர்பு இணைப்புத் துறையில், சுதேசி தொழில்நுட்பத்துடன் சுமார் ரூ.37,000 கோடி செலவில் கட்டப்பட்ட 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்பேசி கோபுரங்களை பிரதமர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட 92,600 க்கும் மேற்பட்ட 4ஜி தொழில்நுட்ப தளங்களும் அடங்கும். தொலைதூர, எல்லைப்புற மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 26,700 இணைக்கப்படாத கிராமங்களை இணைத்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்களுக்கு சேவை செய்ய டிஜிட்டல் பாரத் நிதியின் கீழ் 18,900 க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரங்கள் சூரிய சக்தியால் இயங்குவதுடன், இந்தியாவின் மிகப்பெரிய பசுமை தொலைத்தொடர்பு தளங்களின் தொகுப்பாகவும், நிலையான உள்கட்டமைப்பில் முன்னேறவும் உதவுகின்றன.
திருப்பதி, பாலக்காடு, பிலாய், ஜம்மு, தார்வாட், ஜோத்பூர், பாட்னா மற்றும் இந்தூர் ஆகிய எட்டு ஐஐடி-களின் விரிவாக்கத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த விரிவாக்கம், அடுத்த நான்கு ஆண்டுகளில் 10,000 புதிய மாணவர்களுக்கான திறனை உருவாக்கும். மேலும், எட்டு அதிநவீன ஆராய்ச்சி பூங்காக்களை நிறுவும். இதன் மூலம் இந்தியாவின் புத்தாக்க சூழலியலை வலுப்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வலுவான உந்துதலை வழங்கும்.
நாடு முழுவதும் உள்ள 275 மாநில பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களில் தரம், சமத்துவம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட மெரைட் (MERITE ) திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார்.
ஒடிசா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இது சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூரில் உலகத் திறன் மையங்களை நிறுவும். வேளாண் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சில்லறை விற்பனை, கடல்சார் மற்றும் விருந்தோம்பல் போன்ற வளர்ந்து வரும் துறைகளை உள்ளடக்கியது. மேலும், ஐந்து ஐடிஐக்கள் உத்கர்ஷ் ஐடிஐக்களாக மேம்படுத்தப்படும், 25 ஐடிஐக்கள் சிறந்து விளங்கும் மையங்களாக உருவாக்கப்படும்.
மாநிலத்தில் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதற்காக, பிரதமர் 130 உயர்கல்வி நிறுவனங்களில் வைஃபை வசதிகளை அர்ப்பணிப்பார், இதன் மூலம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171974
***
SS/RB/RJ
(Release ID: 2172573)
Visitor Counter : 5
Read this release in:
Odia
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam