பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பிரதமர் அறிவித்தார்
Posted On:
28 SEP 2025 12:03PM by PIB Chennai
தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது;
“தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.”
*****
Release ID:( 2172381)
SS/PKV/SG
(Release ID: 2172389)
Visitor Counter : 14