தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்துகிறது

Posted On: 25 SEP 2025 12:59PM by PIB Chennai

தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் தேர்தல் ஆணையம் கடந்த  ஆறு மாதங்களில் 29 முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தாமதங்களை குறைக்கும் வகையில் 30-வது முன் முயற்சியாக தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை  தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது.

இதன்படி வாக்குகளை எண்ணும் பணி 2 பிரிவுகளைக் கொண்டதாகும். தபால் வாக்குகளை  எண்ணுதல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுதல் ஆகியவை ஆகும். வாக்கு எண்ணப்படும் போது வழக்கமாக காலை 8.00 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையும், காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திர வாக்குகள் எண்ணிக்கையும் தொடங்கும். தற்போது தபால் வாக்குகள் அதிகளவில் பதிவாகி வருவதால் தபால் வாக்குகள் எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தபால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படாமல் தடுக்க போதுமான ஊழியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171058

***

SS/PLM/AG/SH

 


(Release ID: 2171450) Visitor Counter : 7