பிரதமர் அலுவலகம்
நவராத்திரியையொட்டி பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழாவுடன், சுதேசி மந்திரமும் புதிய ஆற்றலைப் பெற உள்ளது: பிரதமர்
Posted On:
22 SEP 2025 9:26AM by PIB Chennai
நவராத்திரி திருநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த முறை நவராத்திரியின் புனிதமான காலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என கூறினார். "ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழாவுடன், இந்தக் காலகட்டத்தில் சுதேசி மந்திரமும் ஒரு புதிய ஆற்றலைப் பெற உள்ளது. வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றுவதற்கான கூட்டு முயற்சிகளில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்," என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"உங்கள் அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள். பக்தி, துணிவு, சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியுடன் நிறைந்த இந்த புனிதப் பண்டிகை, அனைவரது வாழ்விலும் புதிய சக்தியையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். ஜெய் மாதா தி!"
"நவராத்திரி நல்வாழ்த்துகள்! சக்தி, பக்தி மற்றும் ஆனந்தத்தின் இந்தப் புனிதப் பண்டிகை, உங்கள் அனைவரின் வாழ்வில் புதிய எழுச்சியையும், உற்சாகத்தையும், நலத்தையும், வளத்தையும் கொண்டு வர அன்னை அம்பாளிடம் பிரார்த்திக்கிறேன்."
“இந்த முறை, நவராத்திரியின் புனிதமான காலகட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழாவுடன், சுதேசி மந்திரமும் இந்தக் காலகட்டத்தில் புதிய ஆற்றலைப் பெற உள்ளது. வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றுவதற்காக, கூட்டு முயற்சிகளில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.”
***
(Release ID: 2169375)
SS/SE/SH
(Release ID: 2170584)
Visitor Counter : 7
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam