உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நக்சலைட்டுகளுக்கு எதிரான மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 22 SEP 2025 7:30PM by PIB Chennai

நக்சலைட்டுகளுக்கு எதிராக இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நக்சலைட்டுகளுக்கு எதிராக இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியை நமது பாதுகாப்புப் படைகள் பதிவு செய்துள்ளன. மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள நாராயண்பூரில் உள்ள அபுஜ்மத் பகுதியில், நமது படை வீரர்கள் இரண்டு நக்சல் மத்திய குழு உறுப்பினர் தலைவர்களான கடாரி சத்தியநாராயண ரெட்டி என்ற கோசா மற்றும் கட்டா ராமச்சந்திரா ரெட்டி ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.  இவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நமது பாதுகாப்புப் படைகள், நக்சல் இயக்கங்களின் முக்கிய தலைவர்களை முறையாகக் களைந்து, பயங்கரவாதத்தின் முதுகெலும்பை நசுக்கியிருக்கிறார்கள்.”

 

------

AD/BR/KPG

 


(Release ID: 2169884)