தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2025 அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு இயக்கம் 5.0-ஐ தொடங்க தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தயாராகிறது
Posted On:
19 SEP 2025 3:50PM by PIB Chennai
2025 அக்டோபர் 2 முதல் 31 வரை முதன்மை செயலகத்திலும், நாடு முழுவதும் உள்ள ஊடகப் பிரிவுகளிலும் உள்ள அலுவலகங்களில் தூய்மைப் பணிகளை விரிவாக்கவும், பணியிடச் சூழலை மேம்படுத்தவும், நிலுவைப் பணிகளை குறைக்கவுமான சிறப்பு இயக்கம் 5.0-க்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
ஆவண நிர்வாகம், காலாவதியான பொருட்களையும், மின்னணு கழிவுகளையும் அகற்றுதல், அலுவலகங்களில் அழகுப்படுத்துதல் என்பதற்கு இந்த இயக்கத்தின் போது சிறப்பு கவனம் செலுத்தப்படும். அமைச்சகத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் உட்பட அனைத்து ஊடகப்பிரிவுகளுக்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு இயக்கம் 5.0-ன் தயாரிப்பு கட்டத்தில் முதன்மைச் செயலகம் உட்பட அனைத்து கள அலுவலகங்கள் மற்றும் ஊடகப்பிரிவுகளில் இலக்குகளை இறுதிசெய்யவும், நிலுவைக் குறிப்புகளை அடையாளம் காணவும், தூய்மையை மேம்படுத்தவும், இடநிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் அமலாக்கம் மற்றும் தயாரிப்பு குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ 2025 செப்டம்பர் 12 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். ஊடகப்பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் அவற்றின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் இந்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு பொருத்தமான, உரிய நேரத்திலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
***
AD/SMB/AG/SH
(Release ID: 2168741)