புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 5 முதல் 7 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்
Posted On:
17 SEP 2025 12:14PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளது.
எரிசக்தி துறைக்கு ஜிஎஸ்டி விகிதம் 12 முதல் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தூய்மை எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கான செலவுகளை வெகுவாக குறைக்க உதவுகிறது. வீடுகள், விவசாயிகள், தொழில்துறையினர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மின்சாரத்தை மலிவான விலையில் விநியோகிக்க இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் வழிவகுக்கிறது. சூரிய மின்சக்தி திட்டத்திற்கான மூலதன செலவினங்கள், ஒரு மெகாவாட் அளவிலான உற்பத்தி திறனுக்கு 3.5 முதல் 4 கோடி வரை தேவைப்பட்ட நிலையில், தற்போது, இந்த சீர்திருத்த நடவடிக்கை காரணமாக ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி பூங்காவை அமைப்பதற்கான செலவுகளில் 100 கோடி வரை செலவுகள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
மின்சார விநியோகம் செய்யும் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் மீதான நிதிச்சுமைகள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் மின்சார கொள்முதல் செய்வதற்கான செலவுகளில் 2000 முதல் 3000 கோடி ரூபாய் வரை வருடாந்தர சேமிப்பாக கிடைக்கும்.
வரும் 2030-ம் ஆண்டிற்குள் 100 மெகாவாட் சூரிய மின் உற்பத்திக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய முதலீடுகளுக்கும், உள்நாட்டு உற்பத்தி மையங்களின் வளர்ச்சிக்கும் உதவிடும். ஒவ்வொரு ஜிகாவாட் மின் உற்பத்தியிலும் 5000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி வழிமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக 5 முதல் 7 லட்சம் வரையிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தூய்மை எரிசக்தி துறையின் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்துள்ளது.
***
SS/SV/AG/KR/SH
(Release ID: 2167878)
Visitor Counter : 2