தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விருது பெற்ற ‘சலோ ஜீதே ஹைன்’ திரைப்படம் சிறப்பு மறு வெளியீடு செய்யப்பட உள்ளது

Posted On: 16 SEP 2025 5:09PM by PIB Chennai

“பஸ் வஹி ஜீதே ஹைன்ஜோ தூஸ்ரோ கே லியே ஜீதே ஹைன்” (மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் மட்டுமே உண்மையில் வெற்றி அடைவார்கள்) என்ற சுவாமி விவேகானந்தரின் தத்துவத்திற்கு மரியாதை செலுத்தும் வகையிலான தேசிய விருது பெற்ற சலோ ஜீதே ஹைன் திரைப்படம் நாடு முழுவதும் 2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சிறப்பு மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. 2018-ம் ஆண்டில் பெரும்பாலானவர்கள் பார்த்த குறும்படங்களில் ஒன்றான இந்தத் திரைப்படம் லட்சக்கணக்கான பள்ளிகளிலும் பிவிஆர் ஐநாக்ஸ்சினிபோலிஸ்ராஜ்ஹன்ஸ்மிராஜ் உள்ளிட்ட சுமார் 500 திரையரங்குகளிலும் திரையிடப்பட உள்ளது.

 மறு வெளியீட்டைக் குறிக்கும் வகையில், 'சலோ ஜீதே ஹைன்: சேவா கா சம்மான்என்ற முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ்அன்றாட வாழ்க்கை சுமூகமாக நடைபெறுவதற்கு பங்களிப்பு செய்யும் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் காவலாளிகள்தூய்மைப் பணியாளர்கள்ஓட்டுநர்கள்கடைநிலை ஊழியர்கள்போன்ற ‘அமைதியான கதாநாயகர்கள்’ கௌரவப்படுத்தப்பட்டு பாராட்டப்படவுள்ளனர்.

 மாணவர்கள்இந்த அமைதியான கதாநாயகர்களுடன் இனைந்து இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு இந்த நிகழ்வுகள் நடைபெறும். இது  அவர்களுடைய மனதில் தங்களுக்காக மட்டும் வாழாமல் மற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

 இந்தத் திரைப்படம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தால் ஈர்க்கப்பட்டதாகும். இது சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தால் வெகுவாக இயக்கப்பட்டு சிறிய உலகில் மாற்றத்தை ஏற்படுத்த முயலும் இளைஞர் நருவின் கதை குறித்து கூறுகிறது. இந்த முன் முயற்சியின் மூலம் தன்னலமற்ற பண்பு மற்றும் சேவை என்ற காலத்தால் அழியாத செய்திதாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய தலைமுறையினரை சென்றடையும்.

 இந்த இயக்கம் ஆழமான சக்தி மிக்க செய்தியைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பணியையும்ஒவ்வொரு தனிநபரையும் மதிக்கவும்மரியாதை அளிக்கவும்லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இது உத்வேகம் அளிக்கும். இது சுயநலமற்ற தன்மைநாட்டிற்கான கடமை ஆகியவற்றின் காலத்தால் அழியாத மதிப்புகளை வலுப்படுத்துகிறது.  இது நமது பிரதமருக்கான ஒரு  உண்மையான மரியாதைக்குரிய செயல் என்று அதன் தயாரிப்பாளர் மகாவீர் ஜெய்ன் கூறியுள்ளார். இப்படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் தீப்பொறியை ஏற்றி நோக்கமுள்ள  வாழ்வை அவர்கள் வாழ ஊக்குவித்துசமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை அவர்கள் வழங்க நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

 

                                                                                                      ----

SS/IR/KPG/KR/SH


(Release ID: 2167388) Visitor Counter : 2