சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் இயக்கம் மற்றும் 8-வது ஊட்டச்சத்து மாதத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 17 அன்று தொடங்கி வைக்கிறார்
Posted On:
14 SEP 2025 4:50PM by PIB Chennai
8-வது ஊட்டச்சத்து மாதம் மற்றும் ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் இயக்கத்தை 2025 செப்டம்பர் 17 அன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இது இந்தியா முழுவதும் பெண்கள், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.
இந்த முயற்சியை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து வழிநடத்துகின்றன, இது பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் சுகாதார முகாம்கள், சுகாதார சேவைகளை வழங்குவதை சுகாதார அமைச்சகம் உறுதி செய்யும், அதே நேரத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊட்டச்சத்து மாதம் நடவடிக்கைகளை பிரச்சாரத்துடன் ஒருங்கிணைக்கும். அங்கன்வாடி மையங்கள் மூலம் பெண்கள் மற்றும் இளம் பருவப் பெண்களை அணிதிரட்டுவது, பெரிய அளவிலான ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் செய்முறை விளக்கங்களையும் வழிநடத்தும். இரு அமைச்சகங்களும் இணைந்து, ரத்த சோகை தடுப்பு, சமச்சீர் உணவுமுறைகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளும், பெண்கள் மற்றும் இளம் பருவப் பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும்.
2047-ம் ஆண்டுக்குள் பிரதமரின் சுகாதாரம், ஊட்டச்சத்து, உடற்தகுதி மற்றும் ஒரு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு தழுவிய அளவில் தீவிரப்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சாரம், சமூக மட்டத்தில் பெண்களை மையமாகக் கொண்ட நோய்த்தடுப்பு, ஊக்குவிப்பு மற்றும் குணப்படுத்தும் சுகாதார சேவைகளை வழங்க முயல்கிறது. இது தொற்று அல்லாத நோய்கள், ரத்த சோகை, காசநோய் மற்றும் அரிவாள் செல் நோய்க்கான பரிசோதனை, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை இணைப்புகளை வலுப்படுத்தும், அதே நேரத்தில் தாய், சேய் மற்றும் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தையும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, நோய்த்தடுப்பு, ஊட்டச்சத்து, மாதவிடாய் சுகாதாரம், வாழ்க்கைமுறை மற்றும் மனநல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் ஊக்குவிக்கும். அதே நேரத்தில், இந்தப் பிரச்சாரம் உடல் பருமன் தடுப்பு, மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் தன்னார்வ ரத்த தானம் ஆகியவற்றில் சிறப்பு முக்கியத்துவம் அளித்து ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளை நோக்கி சமூகங்களைத் திரட்டும்.
இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது, சிறந்த அணுகல், தரமான பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு நட்டா ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பங்குதாரர்களும், இந்த மக்கள் இயக்கத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166534
***
AD/PKV/RJ
(Release ID: 2166580)
Visitor Counter : 2