பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேபாளத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

Posted On: 09 SEP 2025 10:28PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தமது அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாளத்தில்  நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக இன்று நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை  கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வன்முறையில்  ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அமைதி மற்றும் ஒற்றுமையின் மாண்புகளை நிலைநாட்டுமாறு நேபாள குடிமக்கள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு  மோடி பதிவிட்டிருப்பதாவது:

இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபிலிருந்து நான் இன்று திரும்பியபின், ​​பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை  கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். நேபாளத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்தில் நிகழ்ந்த வன்முறை மனதை வருத்துகிறது. இளைஞர்கள் பலர் தங்களது உயிரை இழந்திருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழுமை நிலவுவது நமக்கு மிகவும் முக்கியமானது. நேபாளத்தில் உள்ள எனது அனைத்து சகோதர, சகோதரிகளும் அமைதி காக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

***

(Release ID: 2165120)

AD/IR/AG/KR

 


(Release ID: 2165350) Visitor Counter : 2