குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆதி கர்மயோகி திட்டத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற பழங்குடி மக்கள் அடங்கிய குழுவினர் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்

Posted On: 09 SEP 2025 5:53PM by PIB Chennai

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, பன்முக பின்னணிகளைக் கொண்ட புகழ்பெற்ற பழங்குடி மக்களின் குழுவினர் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை செப்டம்பர் 9, 2025 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர். மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் ஆதி கர்மயோகி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முன்முயற்சியின் கீழ் பழங்குடி தலைவர்களின் தொடர்ச்சியான சந்திப்புகள் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி இறுதியானதாக இருந்தது.

 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், பழங்குடி சமூகம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கான பாராட்டத்தக்க முன்முயற்சியாக ஆதி கர்மயோகி திட்டம் செயல்படுவதாகக் கூறினார். உள்ளடக்கிய மற்றும் சமமான இந்தியாவைக் கட்டமைக்கும் நமது கூட்டு உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது, என்றார். வளர்ச்சியின் பயனாளிகளாக பழங்குடி சமூகங்கள் இருப்பதை உறுதி செய்வதுடன், நாட்டின் எதிர்காலத்தின் கூட்டு வடிவமைப்பாளர்களாகவும் அவர்கள் விளங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

கடந்த ஜூலை மாதம் ஆதி கர்மயோகி திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒரு லட்சம் கிராமங்களில், அதிகாரிகள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பழங்குடி இளைஞர்களை உள்ளடக்கிய 20 லட்சம் ஆதி கர்மயோகிகள் பெருவாரியாக பயனடைந்து வருவதைக் குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

 

சமத்துவம், நீதி மற்றும் மரியாதை நிறைந்த சூழலைக் கொண்ட, பழங்குடி சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகள் பாதுகாக்கப்படும், நமது பழங்குடி சகோதர சகோதரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையிலான ஒரு சமூகத்தையும் நாட்டையும் கட்டமைக்க, நமது பழங்குடி சகோதர சகோதரிகளின் தீவிர பங்கேற்புடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார். பழங்குடி மக்களின் தனித்துவமான அடையாளத்தையும் வளமான கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களை பிரதான பிரிவில் இணைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165012

***

 

(Release ID: 2165012)

AD/BR/KR


(Release ID: 2165190) Visitor Counter : 7