தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஜி 20 நாடுகளிலேயே வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் குறைவு- மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
Posted On:
08 SEP 2025 3:21PM by PIB Chennai
இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2 சதவீதமாக உள்ளதாகவும் இது ஜி 20 நாடுகளிலேயே இது குறைவானது என்றும் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார அமைப்பின் 2025 வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கினார்.
தேசிய வேலைவாய்ப்பு சேவை தளத்தில் இளையோர் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான மென்டர் டுகெதர், குய்க்கர் ஆகிய நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இடையே புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இணை அமைச்சர் திருமிகு ஷோபா கரந்தலஜே முன்னிலையில் கையெழுத்தானது.
அப்போது பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசிய வேலைவாய்ப்பு சேவை தளத்தில் சுமார் 52 லட்சம் வேலை வழங்குவோரும், 5.79 கோடி வேலை தேடுவோரும் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 7.22 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் குறித்து தளத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது வெறும் வேலைவாய்ப்பு குறித்த பட்டியல்களாக இல்லாமல், அனைத்து வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளுக்கான ஒரே தீர்வாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போது 44 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு அமேசான், ஸ்விகி உள்ளிட்ட 10 முக்கிய நிறுவனங்களுடன் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்தார்.
***
SS/IR/LDN/KR
(Release ID: 2164789)
Visitor Counter : 2