பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கயானா அதிபருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

Posted On: 06 SEP 2025 9:09PM by PIB Chennai

கயானா நாட்டின் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற அதிபர் திரு இர்ஃபான் அலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “வலிமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்களிடையேயான உறவுகளில் அடித்தளமிட்டிருக்கும் இந்தியா-கயானா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருக்கிறேன்”, என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற அதிபர் இர்ஃபான் அலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலிமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்களிடையேயான உறவுகளில் அடித்தளமிட்டிருக்கும் இந்திய-கயானா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”

@presidentaligy.

****

(Release ID: 2164428)

AD/BR/SG

 

 


(Release ID: 2164486) Visitor Counter : 2