மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியீடு
प्रविष्टि तिथि:
04 SEP 2025 4:03PM by PIB Chennai
நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான செயல் திட்டம் தேசிய கல்விக் கொள்கை 2020 வகுத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று அவர், இந்திய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இது போன்ற தரவரிசைப் பட்டியல் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சிறந்த செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவது குறித்தும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறினார்.
இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரமதிப்பீட்டு நிறுவனம் நாட்டின் தலைசிறந்த மதிப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தியாவை அறிவு சார் வளர்ச்சியில் சக்தி வாய்ந்த நாடாக உருவெடுக்கச் செய்யும் வகையில், உயர் அளவிலான தரநிலைகளுக்கான மதிப்பீடுகள் அவசியம் என்று அமைச்சர் கூறினார்.
தரவுகள் அடிப்படையில் தரநிலைகளுக்கான அளவீடுகள் மற்றும் வகைப்பாடுகள் உட்பட மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு சிறப்பான அங்கீகாரத்தை வழங்குவதற்கு இந்த நிறுவனம் உதவிடும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை நிறைவேற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இது போன்ற தனித்தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில், பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
2015-ம் ஆண்டு கல்வி நிறுவனங்களின் தரநிலைகளை மதிப்பீடு செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பை அமல் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163711
***
SS/SV/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2163837)
आगंतुक पटल : 17