குடியரசுத் தலைவர் செயலகம்
ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
04 SEP 2025 6:08PM by PIB Chennai
ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“ஆசிரியர் தினத்தையொட்டி நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிப்பவராக திகழ்ந்த சிறந்த கல்வியாளரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளாகும். இந்தத் தருணத்தில் அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
ஆசிரியர்கள் நமது சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாகவும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளாகவும் திகழ்கின்றனர். ஆசிரியர்கள் தங்களது அறிவாற்றலின் மூலம் மாணவர்களை ஊக்குவித்து அவர்கள் சிறந்து விளங்க வழிகாட்டுகின்றனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறிச்செல்லும் நிலையில் பொறுப்புள்ள, அறிவாற்றலுடன் கூடிய சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை கல்வி முறையை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
படைப்பாற்றல், புதுமை மற்றும் நற்பண்புகளை கொண்ட மாணவர்களை உருவாக்க அனைவரும் இணைந்து சிறந்த சூழலை உருவாக்குவோம். சிறந்த மாணவர் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஆசிரியர்கள் வெற்றி பெற எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
***
(Release ID: 2163789)
SS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2163833)
आगंतुक पटल : 21