பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
அங்கன்வாடி மையங்களை தொடக்கப் பள்ளிகளுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைந்து தொடங்க உள்ளன
प्रविष्टि तिथि:
02 SEP 2025 3:23PM by PIB Chennai
அங்கன்வாடி மையங்களை தொடக்கப் பள்ளிகளுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல்களை நாளை (2025 செப்டம்பர் 3, புதன்கிழமை) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைந்து தொடங்க உள்ளன
தில்லி, விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்வில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி.அன்னபூர்ணா தேவி, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.தர்மந்திர பிரதான், அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
வளர்ந்த இந்தியாவுக்கான மனித வளங்களை வலுப்படுத்துவதில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்துவதில் இந்த முயற்சி ஒரு முக்கியமான படியாகும். இந்த வழிகாட்டுதல்கள், அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் மாதிரி மூலம், குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
ஏற்கனவே 2.9 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் இந்த மாதிரியைத் திறம்பட செயல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அத்தியாவசியமான செயல்முறை தெளிவை வழங்குகின்றன.
---
(Release ID: 2163030)
SS/EA/KR
(रिलीज़ आईडी: 2163668)
आगंतुक पटल : 8