உள்துறை அமைச்சகம்
ஜம்முவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுப்பு குழு ஆய்வு செய்த பின் உதவிகள் வழங்கப்படும்: உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
01 SEP 2025 5:28PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டு கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இயற்கை பேரிடரால் ஜம்முவில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். ஜம்முவில் மங்கு சாக் கிராமம், பிகாரம் சௌக், சிவன் கோயில் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்த அவர், அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு அவரது தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் ஜம்முவில் தற்போதுள்ள சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா மற்றும் மத்திய யூனியன் பிரதேச அரசுகளின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்ட உள்துறை அமைச்சர் இந்த இக்கட்டான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு கேட்டறிந்ததாகவும் இதன் காரணமாக பலரது உயிர்களை பாதுகாக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத விவரங்கள் குறித்து நவீன கணக்கெடுப்பு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
மத்திய அரசு, யூனியன் பிரதேச நிர்வாகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்துறை அமைச்சக செயலருடன் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் சேத மதிப்பீடு குறித்த கணக்கெடுப்பிற்கு உயர் முன்னுரிமை வழக்கப்படும் என்று தெரிவித்தார்.
குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், ராணுவம் மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் விமானப்படையும் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 209 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162745
***
SS/SV/AG/DL
(Release ID: 2162821)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada