பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தியான்ஜினில் சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

Posted On: 31 AUG 2025 11:06AM by PIB Chennai

மதிப்பிற்குரிய சீன அதிபர் அவர்களே,

உங்களது அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நேர்மறையான பாதையை அளித்தது. எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமைதியும் ஸ்திரத்தன்மையும் கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி மேலாண்மை குறித்து நமது சிறப்பு பிரதிநிதிகள் ஒரு புரிதலை எட்டியுள்ளனர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளும் தொடங்கப்படுகின்றன. நமக்கு இடையேயான ஒத்துழைப்பு நமது இரு நாடுகளின் 280 கோடி மக்களின் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கும் வழி வகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்.

மதிப்பிற்குரிய சீன அதிபர் அவர்களே,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை சீனா வகித்ததற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சீனாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததற்கும் இன்றைய கூட்டத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

****

(Release ID: 2162398)

AD/PLM/RJ

 

 


(Release ID: 2162432) Visitor Counter : 2