குடியரசுத் தலைவர் செயலகம்
ஸ்கோப் மேன்மை விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
Posted On:
29 AUG 2025 2:03PM by PIB Chennai
2022-23-ம் ஆண்டுக்கான ஸ்கோப் மேன்மை விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 29, 2025) புதுதில்லியில் வழங்கினார்.
இந்த விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்புமிக்க பங்களிப்பை ஸ்கோப் மேன்மை விருதுகள் கொண்டாடுவதாக கூறினார். சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், நெறிமுறை போன்ற அனைத்து அம்சங்களிலும் பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்புடன் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். நீடித்த வளர்ச்சி, பெருநிறுவன ஆளுகை, பெருநிறுவன சமூகப் பொறுப்பு, புதிய கண்டுபிடிப்பு போன்ற பல பரிமாணங்களில் சிறந்த செயல்பாட்டை கௌரவிப்பதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் உயர்நிலை அமைப்பான ஸ்கோப் அமைப்பை அவர் பாராட்டினார்.
தொழில்மயம், உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக முன்னேற்றம், சமச்சீரான பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைத்தவை பொதுத்துறை நிறுவனங்கள் என்று கூறிய அவர் காலப்போக்கில் இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார். அரசு மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்கிடையே தங்களின் செயல்பாடு மூலம் பொருளாதார மற்றும் தேசிய இலக்குகளை அடைவதில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
தேசப் பாதுகாப்பு, இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தற்சார்பு ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்புகளை நிரூபிக்கும் தன்மையுடன் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு இருப்பதாக அவர் கூறினார். வேளாண்மை, சுரங்கம், பொருள் உற்பத்தி, பதப்படுத்துதல், சேவைகள் போன்ற முக்கியத் துறைகளில் இந்த நிறுவனங்களுக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161795
***
AD/SMB/SG/KR/DL
(Release ID: 2162086)
Visitor Counter : 11