பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் சாதனை அளவில் நடைபெற்று வருகிறது: பிரதமர்

Posted On: 24 AUG 2025 10:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாதில் கன்யாசத்ராலயாவில் இரண்டாம் கட்ட சர்தார்தாம் திட்டப்பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றினார். சர்தார்தாம் என்ற பெயர் தியாகத்துடன் கூடிய பணிகளைக் குறிக்கும் வகையில் உள்ளது என்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சேவைக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ள தங்கும் விடுதியை அவர் தொடங்கி வைத்தார். கனவுகள் மற்றும் விருப்பங்களைச் சுமந்து இந்த விடுதியில் தங்கவுள்ள சிறுமிகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று கூறினார். தற்சார்பு மற்றும் திறனுள்ள சிறுமிகள் நாட்டைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுவதுடன் அவர்களின் குடும்பங்களும் முன்னேற்றம் அடையும் என்று குறிப்பிட்டார். இந்த தங்கும் விடுதியில் இடம் கிடைத்துள்ள சிறுமிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

குஜராத் மாநிலத்தில் தாம் முதலமைச்சராக பணியாற்றியதை நினைவுகூர்ந்த பிரதமர், நாட்டின் வளர்ச்சியில் குஜராத் மாநிலத்தின் முன்னேற்றமும் இன்றியமையாதது என்பதை எப்போதும் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் வாயிலாக நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடிவதாக அவர் கூறினார்.  30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல் குறித்து பேசிய அவர், சமூக சவால்களை எதிர்கொண்டு புதிய பாதையை மாநிலத்தில் முன்னேற்றத்திற்கு வலு சேர்த்ததாக அவர் தெரிவித்தார்.  அப்போது குஜராத் மாநிலத்தில் பல்வேறு குடும்பங்கள் தங்களது குடும்பங்களை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் இருந்ததாகவும் ஏராளமான பெண் குழந்தைகள் கல்வி அறிவு பெறாத நிலை இருந்ததாகவும் பலர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் பங்கேற்புடன் இந்த நிலையை மாற்றியமைத்த பெருமை அம்மாநில மக்களையேச் சாரும் என்று அவர் கூறினார்.  

முன்பு பெண் சிசுக் கொலை போன்ற செயல்கள் நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் அது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் தெரிவித்தார். பெண் சிசுக் கொலைக்கு எதிரான இயக்கங்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் பாலின சமத்துவம் வலுவடைய உதவியதாக அவர் கூறினார். பெண் தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பெண் சிசுக் கொலை குறைக்கப்பட்டது என்றும் இதன் காரணமாக ஆண் - பெண் இடையேயான விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்தது என்றும் அவர் கூறினார்.

சமூக நலன்களுக்கான தூய்மையான மற்றும் உன்னதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சமூகமும் தெய்வீகத் தன்மை கொண்டதாக மாற்றம் அடைகிறது என்று குறிப்பிட்டார். இது போன்ற முயற்சிகள்  பெண் குழந்தைகள் கல்வி பெறுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்ணியமான வாழ்க்கை மற்றும் வசதிகளை அவர்களால் மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்  என்ற இயக்கம் நாடு தழுவிய மக்கள் இயக்கமாக  உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பேசிய அவர், பெண்களின் திறன் மற்றும் அவர்களது குரல்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டினார்.  கிராமப்புறங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்டு வரும் லட்சாதிபதி சகோதரி திட்டத்தில் 3 கோடி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் இரண்டு கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக உருவெடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்கும் வகையில் திறன் இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தேசிய கல்விக் கொள்கையில் திறன் மேம்பாட்டுக்கு உயர் முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் சாதனை அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய பிரதமரின் இல்லம்தோறும் இலவச சூரிய சக்தி திட்டத்தின் கீழ், சூரிய மின் உற்பத்திக்கான மேற்கூரை அமைப்புகளை நிறுவும் பணிகள் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். ட்ரோன் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக அவர் கூறினார்.  மாநில அரசு மேற்கொண்டு வரும் இது போன்ற முன்முயற்சிகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற இயக்கங்களின் வெற்றி நம் அனைவரது கூட்டு முயற்சிக்கு வலு சேர்த்துள்ளதாகவும் எதிர்கால தலைமுறையினருக்கு அடித்தளம் அமைந்துள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

***

(Release ID: 2160409)

AD/SV/KPG/RJ


(Release ID: 2160526)