நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2025 ஜூலை மாதத்தில் ரூ 2.72 கோடி பணத்தைத் திரும்பப் பெற தேசிய நுகர்வோர் உதவி மையம் உதவியுள்ளது
கோயம்புத்தூரைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவரின் பிரச்சனைக்கு தீர்வு
Posted On:
22 AUG 2025 12:28PM by PIB Chennai
தேசிய நுகர்வோர் உதவி மையம் (என்சிஎச்) கடந்த ஜூலை மாதத்தில் ரூ 2.72 கோடி மதிப்பிலான பணத்தைத் திரும்பப் பெறுவதை வெற்றிகரமாக எளிதாக்கியது. 27 துறைகளில் 7,256 நுகர்வோர் குறைகளைத் தீர்த்தது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவரது பிரச்சனைக்கும் இந்த மையம் சுமூகத் தீர்வை ஏற்படுத்தியுள்ளது.
மின்னணு வணிகத் துறை 3,594 வழக்குகளுடன் அதிகபட்சமாக ரூ 1.34 கோடி மதிப்பிலான பணத்தைத் திரும்பப் பெறவும், இதைத் தொடர்ந்து சுற்றுலாத் துறை ரூ 31 லட்சம் பணத்தைத் திரும்பப் பெறவும் இது உதவியுள்ளது.
உதவி எண்ணின் தொழில்நுட்ப மாற்றம் அதன் அணுகலையும் செயல்திறனையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. அழைப்புகள் பத்து மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளன, 2015 டிசம்பரில் 12,553 ஆக இருந்த அழைப்புகள், 2024 டிசம்பரில் 1,55,138 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சராசரி மாதாந்திர புகார் பதிவுகள் 2017-ல் 37,062 ஆக இருந்து 2024-ல் 1,11,951 ஆக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் நடைமுறைகளை நுகர்வோர் ஏற்றுக்கொள்வதும் அதிகரித்துள்ளது. செயலி வழியாக குறைகளை பதிவு செய்வது 2023 மார்ச் மாதத்தில் 3% ஆக இருந்து 2025 மார்ச்சில் 20% ஆக உயர்ந்துள்ளது.
நுகர்வோர், அரசு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைந்த தளமாக என்சிஎச் செயல்படுகிறது. ஒருங்கிணைப்பு கூட்டாளர்களின் எண்ணிக்கை 2017-ல் 263 -ல் இருந்து 2025-ல் 1,131 ஆக படிப்படியாக விரிவடைந்துள்ளது, இது கூட்டு தீர்வு வழிமுறைகளை வலுப்படுத்துகிறது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் அதன் கட்டளைக்கு இணங்க, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை, என்சிஎச் மூலம் பெறப்பட்ட பொதுமக்களின் குறைகளின் தரவுகளை கண்காணிக்கிறது.
உதாரணத்துக்கு, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நுகர்வோர் ஒரு இணையவழி வணிக தளம் மூலம் ரூ 7,781 மதிப்புள்ள ஆர்டரைச் செய்தார். வாங்கிய பிறகு, கூடுதல் தகவல்கள் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை. ஆர்டரை ரத்துசெய்து, பணத்தைத் திரும்பப் பெறக் கோரி மின்னஞ்சல் அனுப்பிய போதிலும், நிறுவனத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. பின்னர் நுகர்வோர் என்சிஎச்-ஐ அணுகினார். என்சிஎச் வழங்கிய ஆதரவைத் தொடர்ந்து, பிரச்சினை தீர்க்கப்பட்டது. "நீங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளீர்கள்! முழு குழுவிற்கும் பாராட்டுகள்" என்று நுகர்வோர் பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார்.
***
(Release ID: 2159698)
SS/PKV/AG/KR
(Release ID: 2159751)