மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசியமான, அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட வேண்டும் : நிறைவு அமர்வில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

Posted On: 21 AUG 2025 4:08PM by PIB Chennai

2025  ஜூலை 21 அன்று தொடங்கிய 18-வது மக்களவையின் 5-வது அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று உரையாற்றிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, அவையில் தொடர்ந்து திட்டமிடப்பட்ட இடையூறுகள் ஏற்பட்டதை குறித்து கவலை  தெரிவித்தார். மக்களவை அல்லது நாடாளுமன்ற வளாகத்தில் கோஷங்கள் எழுப்புவது, பதாகைகளைக் காட்டுவது மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அவர் கூறினார். பொதுமக்கள், பிரதிநிதிகளிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர் என்றும், எனவே, பொது நலன் சார்ந்த விவகாரங்கள் மற்றும் முக்கிய சட்டங்கள் குறித்து அவசியமான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களுக்கு அவையில் தங்கள் நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த அமர்வின் போது, அனைத்து ​​அரசியல் கட்சி உறுப்பினர்களும் பேசவும், முக்கியமான சட்டங்கள் மற்றும் பொது நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியதாக மக்களவைத் தலைவர் குறிப்பிட்டார். எனினும் அவையில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டது  துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கவலை தெரிவித்தார். அவையில் கோஷங்கள் மற்றும் இடையூறுகளைத் தவிர்த்து, அவசியமான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

இந்த அமர்வில் 419 கேள்விகள் பட்டியலிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் திட்டமிடப்பட்ட இடையூறுகள் காரணமாக, 55 கேள்விகளுக்கு மட்டுமே நேரடியாக பதில் அளிக்க முடிந்தது என்றும் திரு பிர்லா தெரிவித்தார். இந்த அமர்வின் தொடக்கத்தில் 120 மணி நேரம் விவாதிக்கப்படும் என்று முடிவு செய்திருந்த நிலையில், அலுவல் ஆலோசனைக் குழுவும் இதற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், தொடர்ச்சியான திட்டமிடப்பட்ட இடையூறுகள் காரணமாக, இந்த அமர்வில் 37 மணி நேரம் கூட அவை செயல்பட முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார். இந்த அமர்வின் போது பதினான்கு அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பன்னிரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் திரு பிர்லா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159084    

***

AD/IR/AG/KR


(Release ID: 2159287)