பாதுகாப்பு அமைச்சகம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதலாவது இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்தித்தார்
Posted On:
21 AUG 2025 2:34PM by PIB Chennai
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதலாவது இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (21.08.2025) புதுதில்லியில் சந்தித்தார். அப்போது குரூப் கேப்டன் சுக்லாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முயற்சியில் இது மிகப்பெரிய மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் திறன்களை முன்னேற்றுவதில் அவரது பங்களிப்பைப் பாராட்டினார். அவரது ஊக்கமளிக்கும் பயணம் இளையோரை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித்துறையில் தொடர்வதற்கு ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உரையாடலுக்குப் பிறகு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள, பாதுகாப்பு அமைச்சர், குரூப் கேப்டன் சுக்லாவுடன் ஊக்கமளிக்கும் விண்வெளிப் பயணம், அவர் சுற்றுப்பாதையில் மேற்கொண்ட முக்கிய சோதனைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள், இந்தியாவின் முன்னோடித் திட்டமான ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158994
***
AD/IR/AG/KR
(Release ID: 2159045)