பிரதமர் அலுவலகம்
சைப்ரசில் நடைபெற்ற இந்தியா – சைப்ரஸ் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
15 JUN 2025 11:58PM by PIB Chennai
முதலாவதாக சைப்ரஸ் அதிபர் விமான நிலையத்திற்கு நேரில் வந்து தன்னை வரவேற்றதற்காக எனது நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மிகப் பெரிய வர்த்தக வட்டமேசை மாநாட்டை இங்கு ஏற்பாடு செய்ததற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நேர்மறையான சிந்தனைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
23 ஆண்டுகளுக்கு பிறகு சைப்ரஸ் நாட்டிற்கு இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொண்டு வர்த்தக வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். இது இந்தியா – சைப்ரஸ் நாடுகளிடையேயான நல்லுறவின் பொருளாதார முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த மாநாட்டில் உரையாற்றியவர்களின் கருத்துக்களை நான் மிக கவனமுடன் கவனித்தேன். இந்தியா – சைப்ரஸ் நாடுகளிடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை நான் உணர்ந்து கொண்டேன். உ ங்களுடைய இந்த யோசனைகள் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமின்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
நண்பர்களே,
சைப்ரஸ் இந்தியாவின் நம்பகமான நட்பு நாடு என்றும் பலர் தங்களது உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். சைப்ரஸ் நாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க முதலீடுகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என்பதை அறியமுடிகிறது. பல இந்திய நிறுவனங்கள், சைப்ரஸில் முதலீடு செய்துள்ளன. ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக இருக்கும் சைப்ரஸ் நாட்டுடனான இருதரப்பு வர்த்தகம், 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதுடன் இன்னும் மிகக் குறுகிய காலத்தில் 3-வது இடத்தைப் பிடிப்பதற்கு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இறுதியாக சைப்ரஸ் நாட்டு அதிபருக்கு மீண்டும் ஒரு முறை நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சைப்ரஸ் வர்த்தகம் மற்றும் தொழிற்சபை, அந்நாட்டு முதலீட்டாளர்கள் இணைந்து இந்த வர்த்தக வட்ட மேசை மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளமைக்காக அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
***
(Release ID: 2136543)
AD/SV/KPG/KR
(Release ID: 2158953)
Visitor Counter : 4
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam