தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அளவிடக்கூடிய நிகழ்நேர மொழிபெயர்ப்பை ஊக்குவிக்க ‘பாஷா சேது’ சவால்

Posted On: 20 AUG 2025 5:27PM by PIB Chennai

பல்வேறு இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பதற்கு  சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, ‘பாஷா சேதுசவாலின் நோக்கமாகும். இந்திய மொழிகளுக்கான நிகழ்நேர மொழிபெயர்ப்புத் தீர்வுகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்தி புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதை இது இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த சவாலின் மூலம் உருவாக்க முன்மொழியப்பட்ட தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, இந்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய 12 மொழிகள் அடங்கும்.

கூடுதலாக, காஷ்மீரி, கொங்கனி, மணிப்பூரி, நேபாளி, சமஸ்கிருதம், சிந்தி, போடோ, சந்தாலி, மைதிலி மற்றும் டோக்ரி ஆகிய 10 மொழிகளை ஒருங்கிணைக்கும் திறனுடன், அளவிடக்கூடியதாகவும் இது உருவாக்கப்படும்.

இந்தத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில்  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158455

***

(Release ID:2158455 )

SS/BR/KR


(Release ID: 2158911)